You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை…
வெங்கி, கிச்சா, சுப்பு, சுபா, ராம்கி, ரேவதி, எல்லோரும் ஜெட்டி, அரை டிரௌசர் போட ஆரம்பித்த நாட்களிலிருந்தே வளர்ந்து வரும் கிள்ளியூர் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து வரும் நண்பர்கள். அவர்கள் அடிக்காத லூட்டி இல்லை. கிச்சாவின் சுந்தரிப் பாட்டி, சேஷு மாமா, பஜனை சங்கரன் அண்ணா, லட்சுமி அக்கா…இப்படி வயதை மீறி பல நண்பர்கள் இந்த இளம் சிட்டுக்களுக்கு. கோடை விடுமுறை வந்து விட்டால் போதும். அவர்களுடைய வட்டப் பாறை மாநாடு களை கட்டத் தொடங்கி விடும். புதுசு புதுசாக ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்கள். கிட்டிப்புல், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, பாண்டி, முத்து செதுக்கி…இவையெல்லாம் தாண்டி டம்ப் சேரேட், ட்ரெஷர் ஹண்ட், கிள்ளியூர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரை வளர்ந்து விட்டார்கள். இனிமையானவர்கள். எளிமையானவர்கள். குறும்பானவர்கள். அப்பாவிகள். நகர்புற பகட்டுகள் இன்னும் அவர்களைத் தாக்கவில்லை. இன்று எல்லோரும் வளர்ந்து விட்ட போதிலும் பழைய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் தங்கள் லூட்டிகளை தொடர்கிறார்கள்.
இந்த கோடை விடுமுறையில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
கதையைப் படியுங்கள்…தெரியும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை.