You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

தமிழில் அ,வ,ள் (eBook)

Tamilil Aval
Type: e-book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹10
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

பொதுவாக வேறெந்த மொழிகளிலும் இல்லாத இன்பம், சுவை, புன்னகை, புத்துணர்வு... தமிழை உச்சரிக்கும்போது மட்டும் வருகிறதென்றால் அதற்குத் தமிழிற்கே உரிய பல சிறப்பு வாய்ந்த எழுத்துகளும் அதன் தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பு ஓசைகளுமேயாகும். குறிப்பாக லகர, ளகர, ழகர எழுத்துக்கள், பெண்களின் வாரி இருக்கும் கூந்தலில் வாசனை மிகுந்த மல்லிமலர்களை வைத்தாற்போலவும், துள்ளியோடும் மான்களுக்கு துணிவு வைத்துத் தைதார்போலவும், தமிழ் என்கின்ற அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம்மாக அமையபெற்று இருக்கிறது. அதிலும் ளகரம் பதிந்து மதுரம் சுரக்கும் 'அவள்' என்கின்ற சொல் இருகிறதே... அடடா..! அற்புதம்..! 'அவள்' எனும் சொல்லை உச்சரிக்கும்போதே நாவில் நவரசமும் நட்புணர்வு கொள்ளுமென்றால், அவளுக்குக் கவி எழுதவேண்டுமென்றால் கம்பனும் கசிந்து வருவானல்லவா. 'தமிழில் அ,வ,ள்'... இது அவளுக்கும் பெருமை... தங்கத்தமிழிக்கும் பெருமை. நன்றி

About the Author

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு புத்தகத்தை எழுதும் போது, அது அவருடைய முதல் புத்தகமானாலும் சரி, இல்லை ஏழாவது, கடைசி அல்லது, எந்தப் புத்தகமானாலும் சரி... தனது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் நபரே அதை முதலில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். இதன் பின்னணியில் உள்ள காரணத்தை நீங்கள் என்னிடம் கேட்டால், நான் சிறிது நேரம் யோசித்துவிட்டு "நண்பரே...! மண்ணிக்கவும்... அதைப்பற்றி எனக்குத் தெரியாது", என்பேன். ஏனென்றால் என் விஷயத்தில் வேறுபட்ட ஒன்று நடக்கிறது. நான் எப்பொழுதும் எனது நெருங்கிய நண்பர் அதை இரண்டாவதாக படிக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆம்...! நீங்கள் அதை சரியாகத்தான் படித்தீர்கள்.... இரண்டாவதாக… "அப்படியானால் முதலில் யாருக்குப் படிக்கக் கொடுப்பீர்கள் ...?", என்று நீங்கள் என்னிடம் கேட்டால், "நானே ..!", என்பேன். ஏனென்றால், என்னைப் பொருத்தவரை, 'ஒரு எழுத்தாளர் தான் தனது சொந்த எழுத்துக்களை முதலில் படிப்பவர்', என்று நான் கருதுகிறேன். அது, அதாவது என் எழுத்து, உங்களைப் போன்ற பிற வாசகர்களின் இதயங்களை அடைய முதலில் என்னைக் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் இப்போது அதைப் படித்துக் கொன்டிருப்பதால், எனது புத்தகம் ஏற்கனமே என்னை வென்று உங்களிடத்திற்கு கடந்துவந்திருகிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இந்த எழுத்துப் பாதையில் இது எனக்கு ஏழாம் ஆண்டு, எட்டவது புத்தகம். நான் ஒரு வருடம் முன்பு எல்லாவற்றையும் விட்டு வெளியேறவிருந்தேன். கடந்த ஒரு வருடமாக, என் பேனாவிலிருந்து எதுவும் வெளிவரவில்லை. ஆனால் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல என் நம்பிக்கையை மீட்டெடுத்து, இந்த புத்தகத்தை அனைத்து வாசகர்களுக்கும் மகிழ்ச்சியான இதயத்துடன் வழங்குகிறேன்.

Book Details

Publisher: Ve_Dope_Together
Number of Pages: 19
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

தமிழில் அ,வ,ள்

தமிழில் அ,வ,ள்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book தமிழில் அ,வ,ள்.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.