You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

நிழல் உருவின் செந்நிற கவசம்

The Silhouette's Red Helmet
Ludwig Alen
Type: Print Book
Genre: Mystery & Crime, Horror
Language: Tamil
Price: ₹150 + shipping
Price: ₹150 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

அது அடர்ந்த காட்டினுள் ஊடுருவிச் செல்லும், நீண்ட நெடிய நெடுஞ்சாலை. ஆள் ஆரவமற்ற நள்ளிரவு நேரங்களில் அங்கே, தொடர்ச்சியான கொடூர விபத்துகள் நடந்தேறுகின்றன.
அவைகள், விபத்துகள் தானா அல்லது கொலையா..?! என்கிற சந்தேகமே, வாசகர்களுக்கு தேவையில்லை.
ஏனெனில் நடப்பது எல்லாமும் கொலைகள்தாம்..!

சிவப்பு நிற ஹெல்மெட் அணிந்தபடி, ரெஸ்டோ-மாட் மோட்டார் பைக்கில் வரும் சைக்கோ கொலையாளிதான், அந்த கொலைகளுக்கெல்லாம் காரணம்.

அந்த கொலைகாரன் யார் என்றும், அவன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றும், அவன் எதற்காக இதனை செய்கின்றான் என்றும் கூட, வாசகர்களுக்கு தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

சைக்கோ கொலையாளி யாரென்று தெரியும் ; அவனின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே வாசகர்களுக்கு தெரிந்துவிட்டால், இந்த நாவலை படிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்க
போகிறதென்று, நீங்கள் கேட்கலாம்.

கூடவே, இதுவொரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் பாணியில் இயங்கலாம், எனவும் நீங்கள் யூகிக்கலாம்.

மேலும் இதுவொரு, வழக்கமான கதையாகவும் சிலருக்கு தோன்றலாம்.

நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, நீங்கள் சற்றும் எதிர்பார்த்திராத திருப்பங்களுடன்.. ஒவ்வொரு காட்சியும் தேய்வழக்கு (க்ளீஷே) துளியும் இல்லாமல், பரபரப்பின் உச்சத்தில் உங்களை கொண்டு சேர்க்கும்.

இதுவொரு 'ஸ்லோ பர்ன்' வகை நாவலாக இருந்தாலுங்கூட, அது கதையின் ஓட்டத்திற்கு மட்டுந்தானே தவிர.. வாசகர்களின் மன கண்ணோட்டத்திற்கு அது இல்லை.
முழுக்கமுழுக்க திரைக்கதை பாணியில், காட்சிமொழியில் வடிவமைக்கப்பட்ட இந்த நாவலில், சுமார் நான்கு அத்தியாயங்களும், 40 சீன்களும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆக, இதுவொரு மல்டி ஜானராக இருக்கும் பட்சத்தில், கதையின் யதார்த்தம் மற்றும் கதையின் போக்கு சீர்குலைந்துவிடுமோ.. என்கிற குழப்பம் வேண்டாம்.
கதை நேர்கோட்டில், மிக மிக சாமர்த்தியமாகவே இயங்கும்.

'சைக்கலாஜிக்கல், பில்லாசபிகல், மிஸ்டரி, ஹாரர், ரொமாண்டிக், ஆக்‌ஷன் திரில்லர்’ என, ஒரு முழு பேக்கேஜ்ஜாக வாசகர்களுக்கு, வியக்கத்தகு திரைப்படத்தைக் கண்ட திருப்தியை கொடுக்கும்.

இதுவொரு ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ என்ற ஒரு வகைமைக்குள் மட்டுமே அடங்கிவிடாது. இதுவொரு ‘பிலாசாபிக்கல், ஹாரர், ரொமாண்டிக், ஆக்‌ஷன், கிரைம், பேண்டசி திரில்லர் ஜானராகவும் இது பயணிக்கும்.
சுருக்கமாக, இதனை ஒரு மல்டி ஜானர் நாவலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நாவலில் சுமார் 4 அத்தியாயங்களும் 40 சீன்களும் உள்ளன. ஒரு அத்தியாயத்திற்கு 10 சீன்கள் வீதம், 4 அத்தியாயத்திற்கு 40 சீன்கள் உள்ளன. முதல் அத்தியாயம் — ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், இரண்டாவது அத்தியாயம் — ஒரு பேண்டசி ஹாரர் திரில்லராகவும், மூன்றாவது அத்தியாயம் — ரொமாண்டிக் திரில்லராகவும், நான்காவது அத்தியாயம் — கிரைம் மற்றும் ஆக்‌ஷன் திரில்லராகவும், மொத்தமாக இதுவொரு பிலாசபிக்கல் திரில்லராகவும் இருக்கும்.

இது தவிர.. சிம்பாலிசம், மினிமலிசம், ஹியூமனிசம் போன்ற கோட்பாடுகளுக்குள் பயணிக்கும் இந்த நாவல், வாசிப்போருக்கு நிறைவுடன் கூடிய புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

கதையில் வரும் ஒவ்வொரு சீனையும் உருவாக்க… ஒருநாளைக்கு சுமார் 5 மணிநேரங்கள் எடுத்துக் கொண்டு, மிகுந்த சிரத்தையுடன், கிளீஷே (தேய்வழக்கு) இல்லாமல், புத்தம் புதிய வடிவில் உருவாக்கியுள்ளேன்.

About the Author

'லூத்விக் ஆலென்' என்கிற புனைப்பெயர் கொண்ட எம்முடைய பெயர் 'பூபாலன்'. நான் கடந்த பத்து வருடங்களாக, சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள், விமர்சன கட்டுரைகள் மற்றும் புனைக்கதைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றேன். உலக சினிமா விமர்சன கட்டுரைகள், உலக சினிமா பகுப்பாய்வுகள், சிறுகதை, நாவல், உரைநடை என.. சுமார் 11 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கின்றேன். அவற்றுள், 'சம் தியரீஸ் இன் தி மூவிஸ்', 'வெல்கம் டூ உலக சினிமா', 'ஆயுத விளைவு', 'வேப்பம் பூ விழுப்பம்', ஆகிய புத்தகங்கள் முக்கியமானவையாக அடங்கும்.

Book Details

ISBN: 9789359140131
Number of Pages: 105
Dimensions: 5"x8"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

நிழல் உருவின் செந்நிற கவசம்

நிழல் உருவின் செந்நிற கவசம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book நிழல் உருவின் செந்நிற கவசம்.

Other Books in Mystery & Crime, Horror

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.