You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Title: Kaali
Author: N. Pichamurthy
இந்த நாடகத்தைப் பற்றி ஒரு வார்த்தை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முந்தி இதை எழுதினேன்; அதுவும் படிப்பதற்காக. நான் விரும்பினால் கூட அதில் மறுபடி இன்று கை வைப்பதென்பது இயலாத காரியம்.
பொழுது போக்க விரும்பும் சோம்பேறிகளுக்காகப் பொழுது போகாத சோம்பேறிகள் எழுதுவதற்குப் பெயர் இலக்கியம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைப்பதில்லை. மனிதனை வளரச் செய்த சக்திகளில் முக்கியமானதொன்று மதம். இன்று மதத்திற்குக் கௌரவம் இல்லை. தற்கால மனிதனை உயர்த்தக் கூடிய சக்தி விஞ்ஞானம். ஆனால் அது அசுரத் தன்மை கொண்டதாய் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளின் உண்மையான வேலையை வெற்றிகரமாக இலக்கியந்தான் செய்யக் கூடும். வருங்கால இலக்கியத்தின் வழியும் இதுவே.
ந. பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - திசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். நவ இந்தியா, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற இதழ்களில் தனது படைப்புகளை அளித்துள்ளார்.
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book காளி.