You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
வரலாற்றில் பல மாவீரர்களும், மாமன்னர்களும் நம் தமிழகத்தை ஆண்டுள்ளனர் அதில் பல்லவ சாம்ராஜ்யம் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்து சுமார் 400 ஆண்டுகள் தென்னகத்தை சிறப்பாக ஆண்டுள்ளனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலம் முழுதும் சிறப்பாகவும், செழிப்பாகவும் ஆண்டு வந்தனர். இவர்களின் காலத்தில் தான் தமிழகத்தில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும், இலக்கியமும் வளர்ச்சியுற்றது. "மாமல்லபுரத்தில்" இருக்கும் கடல் கோவிலே அதற்கு சாட்சியாகும். அந்த பல்லவ சாமராஜ்யத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த ஒரு மன்னனின் மறக்கப்பட்ட சரிதமே இந்த நாவலாகும். இந்த நாவலை அதன் ஆழம் கருதியே பல பாகங்களாக விரிவாக எழுத முற்பட்டுள்ளேன். இந்த நாவலுக்கான தகவல்களை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் "தென்னிந்தியாவின் சரிதம்" என்ற புத்தகத்தில் இருந்து எடுத்துள்ளேன். "இந்திய தொல்பொருள் துறை" யின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பெரிதும் உதவியாய் இருந்தன
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ராஜ ரகசியம்.